பெரம்பலூர் அருகே 4 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை!

schedule
2021-04-08 | 15:58h
update
2021-04-08 | 15:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The body of a woman who went missing 4 days ago near Perambalur has been recovered. Police are investigating!

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா(40). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று கார்த்தி(16), என்ற மகன் உள்ளார். இதனிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் ராஜா உயிரிழந்ததால், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மஞ்சுளா தனது மகன் கார்த்திக்குடன் கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அவரது சகோதரர் கருப்பையா(45), என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு காணாமல் போன மஞ்சுளாவை அவரது சகோதரர் கருப்பையா உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். இதனிடையே கீழக்கணவாய் கிராமத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் மஞ்சுளா சடலமாக மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சுளாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மஞ்சுளா எதிர்பாராமல் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன மனம் பாதிக்கப் பெண், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 23:00:24
Privacy-Data & cookie usage: