விபத்தில் உயிரிழந்த கொத்தனாருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

schedule
2017-03-16 | 14:25h
update
2026-06-27 | 04:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

விபத்தில் உயிரிழந்த கொத்தனாருக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை பெரம்பலூர் நீதிமன்றம் ஜப்தி செய்தது.

The bricklayer who died in the crash of the government to provide compensation for the confiscation bus

tnstc

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகே உள்ள இளைபெருமாள்நல்லூரை சேர்ந்த ராமசந்திரன் மகன் கொடியரசன் (வயது27), கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் தேதி அவருடைய நண்பர் சுரேசுடன் மோட்டார் சைக்கிளில் புதுச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் கொடியரசன் உயிரிழந்தார். இது குறித்து கொடியரசனின் பெற்றோர்கள் ராமச்சந்திரன், லட்சுமி ஆகியோர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு பிப்.2ம் தேதி பெரம்பலூர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.12லட்சத்து 95 ஆயிரம் இழப்பபீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்திரவிட்டது.

அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி நிறைவேற்று மனு தாக்ககல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சத்து 353 வழங்க உத்திரவிட்டு திருச்சி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டது.

உத்திரவின் பேரில் நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துறையூருக்கு செல்ல அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 04:12:05
Privacy-Data & cookie usage: