பேருந்து

பைக் மோதல், ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!!

schedule
2017-03-31 | 09:57h
update
2022-04-04 | 19:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

PERAMBALUR near the bus – bike confrontation, one killed on the spot! Another injured !!

பெரம்பலூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் பைக் மோதியதில் பைக்கில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் இருந்து துறையூர் செல்லும் தனியார் பேருந்து பேருந்து பெரம்பலூரரை நோக்கி சோமண்டாபுதூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பெரம்பலூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இரு வாலிபர்கள் வேப்பந்தட்டை செல்லுவதற்காக வந்து கொண்டிருந்தனர். முன்னே சென்ற காரை முந்துவதற்காக பைக் முன்னேறிய போது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது.

Advertisement

இதில் பைக்கை ஓட்டி வந்த ஆலம்பாடியை சேர்ந்த சுப்பையா மகன் ஞானசேகரன் (வயது 40), சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் உடன் வந்த வேப்பந்தட்டையை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன் (20) என்பவர் பேருந்து மீது தூக்கி வீசப்பட்டதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் விரைந்து சென்று காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்து போன ஞானசேகரனின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் பஸ்சில் மோதிய பைக் சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 14:32:42
Privacy-Data & cookie usage: