பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வரும் செப்.2 அன்று பெரம்பலூர் வட்டத்தில் நொச்சியம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட செல்லியம்பாளையம், வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை (வடக்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட விசுவக்குடி, குன்னம் வட்டத்தில் அகரம்சீகூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட கருப்பட்டாங்குறிச்சி மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் இரூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பெருமாள்பாளையம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.