பொதுமக்களிடம் உள்ள தங்கத்தை விலைக்கு வாங்க மத்திய அரசு ஆலோசனை!

schedule
2026-01-07 | 16:25h
update
2026-01-07 | 16:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The central government is considering buying gold from the public!

தற்போது குரூடாயில் டாலரில் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால், ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் டாலரில் கொள்முதல் செய்யாமல் மாற்றுமுறையில் கொள்முதல் வர்த்தகததை செய்து வருகிறது. மேலும், அமெரிக்க ஆதரவு நாடுகளிடம் பெட்ரோல் குரூடாயிலை இந்தியா போன்ற நாடுகளில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகிறது. இதனால், அமெரிக்காவின் டாலர் தவிர்க்கப்பட்டிருப்பபதால் பல நாடுகள் தங்கத்தை மாற்று நாணயமாகவும், அனைத்து நாடுகளிலும் உள்ள அந்த நாட்டு மத்திய வங்கிகள் தங்கத்தை இருப்பு வைத்து கொள்வதால் தங்கத்தின் விலை அதிகமாகி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement

மாற்றாக நமது மத்திய அரசு “தங்க நகை மதிப்பிழப்பு” (Gold Demonetization) போன்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் நிதி ஆலோசகர் ஒரு ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் இந்தத் தகவல் கூறப்படுகிறது. மக்கள் வைத்துள்ள சுமார் 35,000 டன் தங்கத்தை அரசு விலைக்கு வாங்கினால் அது பொருளாதாரத்திற்கு உதவும் என்பது அதன் சாராம்சம்

ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைத்தது போல, ஒவ்வொரு குடும்பமும் தங்களிடம் உள்ள நகைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் (உதாரணமாக 2027-க்குள்) அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ​அரசிடம் கணக்குக் காட்டாத அல்லது முறையான ரசீது இல்லாத நகைகளை வங்கிகளிலோ அல்லது தனியார் நகைக்கடைகளிலோ அடகு வைக்கவோ அல்லது விற்கவோ முடியாத நிலை வரக்கூடும்.

​ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் (உதாரணமாக 20 பவுன்) தங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் வரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. ​முறையான ரசீது அல்லது ஆவணங்கள் இல்லாமல் வெளிநாடுகளுக்குத் தங்கம் கொண்டு செல்வதை விமான நிலைய ஸ்கேனர்கள் மூலம் அரசு கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது ​இந்தத் திட்டம் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சேமிப்பான தங்கத்தைப் பறிக்கும் ஒரு முயற்சி என்றும், மக்கள் இதற்கேற்ப விழிப்புடன் இருக்க வேண்டும், உமாபதி என்பவர் விடுத்துள்ள யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:44:52
Privacy-Data & cookie usage: