The collector’s call for farmers to join the insurance scheme for paddy crop

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ளள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017-2018 ராபி பருவத்தில் நெல் – II சம்பா பயிH சாகுபடி செய்யவுள்ள அனைத்து விவசாயிகளும் பிரதம மந்திup பயிH காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தங்களின் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் கைபேசி எண் போன்ற அனைத்து விவரங்களுடன், வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் காப்பீட்டு நிறுவன முகவர்களை தொடர்புக் கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகள் வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும், கடன் பெறா விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சேவை மையம் மற்றும் வேளாண் காப்பீட்டு நிறுவன முகவர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

நெல்- II சம்பா பயிருக்குண்டான விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.402-ஐ 30.11.2017-க்குள் பிரிமிய தொகையை செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு சாகுபடி செய்ய உள்ள நெல் – II சம்பா பயிருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 128 வருவாய் கிராமங்களுக்கு அறிவிக்கை பெறப்பட்டுள்ளது.

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களின் விவரம் மற்றும் இதர விவரங்களை தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகளுக்கு விளக்கம் வழங்க சம்மந்தப்பட்ட வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர்களை அணுகி பயன்பெற கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!