பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் விற்பனைக்கு வந்த கள்ளச்சாராய பொட்டலங்கள் பறிமுதல்

schedule
2019-05-22 | 13:48h
update
2019-05-22 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The confiscation of Illicit liquor Pockets for sold at Vellaru near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே வெள்ளர்ற்றில் விற்பனைக்கு வந்த கள்ளச்சாராயத்தை மங்களமேடு போலிசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

லப்பைக்குடிக்காடு அருகில் உள்ள வெள்ளாற்றின் அருகில் இரவு நேரங்களில் சிலர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மங்களமேடு காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் போலிசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடலூர் மாவட்டம், அரங்கூர் – லப்பைக்குடிக்காடு வெள்ளாற்று பகுதியில் சிலர் செல்போன் வெளிச்சத்தை சமிக்கையாக பயன்படுத்தி கள்ளச்சாராயம் விற்று வருவது தெரிந்தது. போலிசார் வருவதை கண்டதும் கள்ளச்சாராயம் விற்றவர்கள் அரங்கூர் பகுதியில் ஓடி தலைமறைவாகி விட்டனர். அந்த பகுதியில் அவர்கள் விட்டுச் சென்ற கள்ளச்சாராய பொட்டலங்களை கைப்பற்றிய போலிசார், மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:19:33
Privacy-Data & cookie usage: