The consumer and foods awareness meeting held in Perambalur.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, (உணவு பாதுகாப்பு துறை ) சார்பில் உணவுப் பொருட்கள் தொடர்பான நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டம் நியமன அலுவலர் மா.சவுமியாசுந்தரி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நியமன அலுவலர் பேசியதாவது:

பொதுமக்களாகிய நாம் அனைவரும் கலப்படமான உணவு பொருள்களை கண்டறிவதற்கான அடிப்படை அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பொருட்களை செய்திதாளில் வைத்து சாப்பிடகூடாது, உணவு பொருட்களை வாங்கும் போது தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி, உணவு தயாரிப்பாளரின் முகவரி, உணவு பாதுகாப்பு தரச்சட்டம் உரிமம் எண் போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

திறந்த நிலையில் விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், மற்றும் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை வாங்கி சாப்பிடக்கூடாது. தண்ணீர் அடைத்து விற்பவர்களிடம் ISI தரச்சான்று முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

உணவு பொருட்களை வாங்கும் போது கடைகாரர் உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் வாங்கி உள்ளாரா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். மேலும் நுகர்வோர்கள் அனைவருக்கும் டெங்கு காய்சல் பரவுதல் தொடர்பாகவும், அதை தடுக்க தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து நுகர்வோர்களுக்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பான புகார் அளிப்பதற்கு வாட்ஸ்அப் எண். 9444042322 என்ற எண்ணில் நுகர்வோர்கள் புகார் கொடுக்கலாம். அப்புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ந.சின்னமுத்து(பெரம்பலூர் நகராட்சி) ந.ரவி (ஆலத்தூர் வட்டாரம்) மா.இலட்சுமணபெருமாள் (பெரம்பலூர் வட்டாரம்) மற்றும் நுகர்வோர்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!