மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு சிறை, அபாராதம் : நீதிமன்றம் தீர்ப்பு

schedule
2017-02-22 | 15:28h
update
2026-06-27 | 13:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The daughter and the father of 7-year prison sentence for sexual molestation, impose a fine of 4 thousand rupees: in Perambalur Mahila Court

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 4 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40), இவருக்கு மனைவி —- இறந்து விட்டார். 14 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவர்கள் அவர்களது தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று செந்தில்குமார், பெரம்பலூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மகளை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால். சிறுமியின் தாத்தா மங்கலமேடு காவல்நிலையத்தில கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில் குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு கூடுதலாக சிறைத் தண்டனை அனுப்பிவிக்க வேண்டும் என்றும் மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் இன்று தீர்ப்பு கூறினார். குழந்தைகள் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கும் பரிந்துறை செய்தார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 13:48:51
Privacy-Data & cookie usage: