தந்தையுடன் காய்கறி வாங்கி வந்த சிறுமி விபத்தில் சிக்கியதில் மரணம்

schedule
2017-05-16 | 19:53h
update
2026-06-25 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் துறைமங்கலம், சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னையன், இவர் நேற்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்கி கொண்டு தனது மகள் திவ்யா (வயது 12) உடன் துறைமங்கலத்திற்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது துறைமங்கலம் நேரு நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே சாத்தனூர் குடிக்காட்டை சேர்ந்த அர்ச்சுணன் (வயது 25) வந்த மோட்டார் சைக்கிளிலும் மோதிக் கொண்டது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த திவ்யா திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திவ்யா மரணமடைந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 15:12:26
Privacy-Data & cookie usage: