பெரம்பலூர் அருகே வயிற்றுவலியால் தற்கொலை முயன்ற இளம் பெண் சாவு

schedule
2017-05-23 | 16:23h
update
2026-06-25 | 05:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது ;

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, இவரது மகள் கவுசல்யா ( 21), கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த கவுசல்யா வயிற்று வலியால் அவதிபட்டுள்ளார். வலி தாங்க முடியாத அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதை அறிந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கவுசல்யாவை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையின் போது நேற்று கவுசல்யா உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 05:34:05
Privacy-Data & cookie usage: