வெப்ப அழுத்தத்தால் பெரம்பலூர் அருகே தார் லாரியின் டீசல் டேங் வெடித்து தீப்பற்றியது

schedule
2017-04-15 | 14:58h
update
2026-09-08 | 07:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The diesel tank truck exploded near a tar in Perambalur thermal stress by fire

பெரம்பலூர் அருகே க.எறையூரில் சாலை போடும் ஒப்பந்த நிறுவனத்தின் முகாம் அலுவலகம் உள்ளது. இன்று நண்பகல் அளவில் தார் சாலையை சீரமைக்கும் லாரி ஒன்று அங்கிருந்த பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததது.

Advertisement

அப்போது தீடிரென லாரியின் டீசல் டேங் வெப்ப அழுத்தத்தால் வெடித்தது. இதில் தீடிரென தீ உண்டாகி பற்றி எரியத் தொடங்கியது. உடனே அருகில் கிடந்த டயர்கள் பற்றி எரியத் தொடங்கியது.

தார் பேரல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அந்த கிடங்கில் இருந்தது. இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் அங்கிருந்த பொருட்கள் மீது நுரைத் தெளிப்பானை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், தீ பரவாமல் தடுத்தனர். இதனால் அங்கிருந்த எளிதில் தீ பற்றிக்கூடிய பொருட்கள் காப்பாற்றப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 07:42:58
Privacy-Data & cookie usage: