பெரம்பலூர் அருகே லைட் அடித்து பார்த்தவர்களை தட்டி கேட்டதில் தகராறு : ஒரு சாவு : ஒருவர் கைது

schedule
2018-07-09 | 06:40h
update
2018-07-09 | 07:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

the dispute heard knocking at the Light looked to beat a dead person arrested near in Perambalur

பெரம்பலூர் அருகே நேற்றிரவு ஊருவிட்டு ஊர் வந்து மது அருந்து கொண்டிருந்தவர்களை தட்டி கேட்டதகராறில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கட்டையால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், நேற்றிரவு 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அது ஊரை சேர்ந்த முனியாண்டி மகன் தேவா (வயது 21), கல்லூரி பட்டப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பு பயில உள்ளார்.

Advertisement

இவரும் அது ஊரை சேர்ந்த யேசுதாஸ் முத்துக்குமார் ஆகிய மூவரும் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது 5 பேர் அங்கு அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் லைட் அடித்து பார்த்துள்ளனர்.

இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அதில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மரக்கட்டையால் தேவாவை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் தேவா அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தேவாவை பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிசிக்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிந்தார்.

இது குறித்து வழக்குப்பபதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முதற்கட்ட மாக தேவாவை தாக்கியது, ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், கண்ணன், கதிரவன், பிரபாகர், அருண் என்பது தெரிய வந்தது. இதில், கண்ணகை கைது செய்த போலீசார் மேலும், மற்ற 4 பேரை கொலை வழக்குப் பதிவு செய்து தீவரமாக தேடி வருகின்றனர்.

இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 13:30:36
Privacy-Data & cookie usage: