தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜன.9ம் தேதி பெரம்பலூரில் நடக்கிறது

schedule
2016-01-01 | 15:56h
update
2026-06-18 | 23:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தேமுதிக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜன.9ம் தேதி பெரம்பலூரில் உள்ள ஜே.கே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

Advertisement

அதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஆக்கப்பணிகள், எதிர்கால பணிகள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை உள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள்,

தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள்,

மாவட்டந்தோறும் உள்ள மகளிர் அணியினர் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில செயலாளர்களும்,

பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 23:18:59
Privacy-Data & cookie usage: