The DMK decision to give Stalin a warm welcome

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என மாவட்ட திமுக இளைஞர் அணியினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ஏ.என்.ரகு வரவேற்றார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு தேவர் முத்துராலிங்க தேவர் நினைவிடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்த வருகை தருகிறார்.

ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞரணியினர் சீருடை அணிந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், நகரம், பேருர் இளைஞர் அணியினருகக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

அதற்கு ஒன்றிய, பேருர் இளைஞர் அணி நிர்வாகிகள் தீவிர ஒத்துழைப்பு தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!