பெரம்பலூருக்கு வந்த ஆ.இராஜாவிற்கு திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு

schedule
2017-12-31 | 16:44h
update
2026-07-04 | 15:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The DMK has been enthusiastically welcomed to A.Raja who came to Perambalur

2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்ட ஆ.இராஜா இன்று பெரம்பலூருக்கு வருகை புரிந்த அவருக்கு திமுக கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர்.

இன்று காலை திருச்சி விமானநிலையம் வந்திறங்கிய ஆ.இராஜாவிற்கு அக்கட்சியை சேர்ந்த திருச்சி , அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதே போன்று, பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூரில் ஆலத்தூர் ஒன்றியம் சார்பில ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி சார்பில் சிறப்பு வரவேற்வு மேளதாளம் மற்றும் வெடி வெடித்து வரவேற்றனர்.

Advertisement

இதே போன்று துறைமங்கலம், பெரம்பலூர் நகரம் சார்பில் வரவேற்பு அளிக்கப்ட்டது. பின்னர், பழைய பேருந்து நிலையத்தில் இருந்த காந்தி, மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த ஆ.இராஜா, பின்னர், மாலை குன்னம் வழியாக அரியலூரை சென்றடைந்த அவர் சென்னை சென்றார். மதியம் அளவில் ஆ.ராஜா சொந்த ஊரான வேலூருக்கு சென்று அவரது தாயார் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து வணங்கினார். அவரது சகோதரர் மற்றும் உறவினர்களிடம் உரையாடினார்.

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண உண்டு சென்றனர்.

ஆ.ராஜா வரவேற்பு நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு துறைமங்கலம் செல்ல வேண்டிய வாகனங்கள் 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், நகரில் வலம் வந்த வாகனங்கள் மற்றும் வானவெடிகள் தொடர்ந்து முழங்கிய சத்தத்தில் நகரம் தொடர்ந்து அதிர்ந்தது.

இந்நிகழ்ச்சிகளால் பொதுமக்கள் முகம் சுளித்தனர். இன்று துறைமங்கலம், பெரம்பலூர் பகுதிகள் கொடி தோரணங்களால் விழாக்கோலம் பூண்டு இருந்தது. தொண்டர்கள் சாரை சாரையாக அணிவகுத்தனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 15:45:50
Privacy-Data & cookie usage: