எந்த தொகுதியில் இருந்தாலும், உரிய தொகுதியில் வாக்களிக்க நவீன காலத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் மாற வேண்டும்; வாக்காளர்களை வதைக்க கூடாது!

schedule
2026-04-25 | 08:29h
update
2026-04-25 | 08:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Election Commission must adapt to modern times to ensure that voting takes place in the appropriate constituency, regardless of the constituency; voters should not be subjected to undue hardship!

தேர்தல் ஆணையம் நாட்டின் கடவுளின் ஏஜன்ட் போல செயல்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏசி அறைகளில் உல்லசாமாக அமர்ந்து கொண்டு மிக்சர் சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஏழை எளியவர்களின் பணத்தை மடக்கி பிடிப்பவர்கள், கட்சியினர் ஒவ்வொரு வாக்களர்களுக்கும் ஆயிரம் முதல் 3 ஆயிரம் லிஸ்ட் போட்டு வீடு வீடாக வினியோகம் செய்யும் போது எங்கே போகிறார்கள் என தெரியவில்லை.

பணிக்காகவும், வறுமையை போக்கிடவும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் ஏழை – எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் சொந்த ஊருக்கு வந்து ஓட்டு போட்டு விட்டு செல்வதற்கு போதும் போதும் என்றாகி வெறுத்து போய் விடுகின்றனர். இதில், கோடைக்காலம் என்பது வேறு. சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டத்தில், ஓட்டு போட இரவு 9மணிக்கு சென்னையில் கோயம்பேட்டில் வாக்களிக்க கிளம்பியவர் கிளாம்பாக்கம் வரவே 3 மணியாகி விட்டது என்றும், விடிந்து பேருந்து கிடைக்காமல் சொந்த ஊருக்கு வரும் போது மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஓட்டு போட முடியாமல் திரும்பி சென்றவர்கள் ஏராளம். உரிய நேரத்திற்கு பஸ் கிடைக்காமல் சிரமமப்பட்டவர்கள் ஏராளம்.

Advertisement

தற்போதை நவீன கால கட்டத்தில் பல தொழில்நுட்பங்கள் புரட்சியால் உருவாக்கப்பட்டு கொட்டிகின்றன. தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும், மக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ, அந்த மாநிலத்தில் தொகுதியில் சில சிறப்பு வாக்குச் சாவடிகளை அமைத்து அங்கேயே வாக்களர்கள் எந்த தொகுதிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கு கட்சியினர் அந்த ஊரில் உள்ள பூத் ஏஜன்டுகளை அனுப்புவார்கள். இதனால், பலர் குடும்பம் குடும்பமாக இரவோடு இரவாக வந்து செல்லும் துயரம் குறையும். மக்களுக்காகதான் அரசாங்கமே தவிர அரசாங்கத்திற்காக மக்கள் இல்ல அரசியல் சாதனத்தை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கானனோர் வாக்களிக்க முடியாமல் போனதற்கு காரணம் தேர்தல் ஆணையம் போக்குவரத்து துறையில் கோட்டை விட்டுவிட்டது தான். வரும் தேர்தலில் வெளியூரில் இருந்தாலும் தொகுதிக்கான எம்.எல்.ஏ மற்றும் எம்.பியை தேர்ந்த முடியும் என்பதை செயல்படுத்த வேண்டும். பொதுமக்களின் துன்பதையும், பொருளாதார விரயம், கால விரயத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் ஆணையம் ஓசியில் ஏசியில் இருப்பதை விட்டு விட்டு தேர்தல் களத்திற்கு வந்து பொதுமக்களின் சிரமத்தை புரிந்து உணர்ந்து அதற்கு ஏற்ப பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெளியூரில், அல்லது நீண்ட தூரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஜனநாயக கடமையாற்ற தபால் ஓட்டுகளை பொதுமக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதை பரீசீலிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 09:23:22
Privacy-Data & cookie usage: