இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், பெரம்பலூர் கலெக்டர் வெளியிட்டார்.

schedule
2021-01-20 | 08:01h
update
2021-01-20 | 08:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The final voter list was released by the Perambalur Collector in the presence of the recognized political parties.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 16.11.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,92,412 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,63,920 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,56,332 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியின் பொது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 20,702 வாக்காளர்கள் பகுதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9,580 ஆண் வாக்காளர்களும், 11,121 பெண் வாக்காளர்களும், மற்றும் இதர 1 வாக்காளர்களும் உள்ளனர்.

Advertisement

இதில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 4,978 ஆண் வாக்காளர்களும், 5,596 பெண் வாக்காளர்களும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 4,602 ஆண் வாக்காளர்களும், 5,525 பெண் மற்றும் இதர 1 வாக்காளர்களும் உள்ளனர். இறப்பபு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக 1,048 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 338 ஆண் வாக்காளர்களும், 356 பெண் வாக்காளர்களும் மற்றும் இதர 1 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 150 ஆண் வாக்காளர்களும், 202 பெண் மற்றும் இதர 1 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 20.01.2021-இல் வெளியிடப்படும் இறுதி வாக்காளர; பட்டியலின்படி 147.பெரம்பலூர; சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி மையங்களில் மொத்தம் 3,02,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,47,320 வாக்காளர்களும், பெண்கள் 1,54,950 வாக்காளர்களும் மற்றும் இதர 21 வாக்காளர்களும் உள்ளனர்.

148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,35,240 வாக்காளர்களும், பெண்கள் 1,38,442 வாக்காளர்களும் மற்றும் இதர 13 வாக்காளர்களும் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,75,986 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,82,560 வாக்காளர்களும், பெண்கள் 2,93,392 வாக்காளர்களும் மற்றும் இதர 34 வாக்காளர்களும் உள்ளனர்.

இதனை தொடர்ந்து, 20.01.2021 முதல் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. எனவே, வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் 20.01.2021 முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் படிவம் 6, 6 ஏ, 7, 8 மற்றும் 8ஏ அளித்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, தேர்தல் வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன், அதிமுக பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, காங்கிரஸ் தலைவர் சுரேஷ், பகுஜன் சமாஜ்வாடி மாவட்ட செயலாளர் காமராஜ், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 05:46:38
Privacy-Data & cookie usage: