பெரம்பலூரை அதிமுகவின் எக்ஃகு கோட்டையாக மாற்றுவதே இலக்கு: மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் சூளுரை!

schedule
2023-10-08 | 18:02h
update
2023-10-08 | 18:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The goal is to make Perambalur a steel fortress of AIADMK: District Secretary R. Tamilselvan Pledge!

பெரம்பலூர் மாவட்ட அதிமுகவின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார்.

Advertisement

மாவட்ட செயலாளர் இளம்பை. ஆர்.‌ தமிழ்ச்செல்வன் (RTS) பேசியதாவது:

வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தர்களில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெரம்பலூரை அதிமுகவின் எஃகு கோட்டையாக மாற்றி பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி. கே.பழனிச்சாமியிடம் சமர்ப்பிப்பது தனது முதல் இலக்கு எனவும், திமுகவிற்கு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சிம்ம-சொப்பனமாக இருக்கும், மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில பூத் கமிட்டி அமைப்பு தொடர்பான ஆலோசனைகளையும் குறித்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு குறித்தும் பேசினார்.

மேலும், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் கட்சி பொறுப்பாளர்கள் ஆர்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்துள்ளனர். வரும் காலங்களில் அவர்களின் பொருளாதார சிரமங்களை குறைப்பேன் என்றும் பேசினார்.

முன்னாள் எம்.பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை.தா.செழியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார், உதயம் ரமேஷ், செல்வமணி, ரவிச்சந்திரன், சசிக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பேரூர் செயலாளர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 18:39:19
Privacy-Data & cookie usage: