The Government can apply online to join Government Assistance and Private Vocational Training Centers

பெரம்பலூர் : அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சிகள் தொடங்குகின்றன.

இந்த ஐடிஐக்களில் ஒதுக்கப்பட்டுள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மாவட்ட அளவில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் இந்த ஐடிஐ க்களில் சோ;க்கை பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற 8,10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் இவற்றை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைய தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும்.

ஒரு மாணவ விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஒற்றைச்சாளர முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!