The government will have priority in job offers: demand at the Disabled persons conference

அரசு வழங்கும் வேலை வாய்ப்புகளின் காலியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் விதிவைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும், என, ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் 3ம் ஆண்டு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறன் படைத்தவர்கள் நலச்சங்கத்தின் 3ம் ஆண்டு மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் சரவணபவா தலைமையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கதிர்முருகன் வரேவற்றார்.

மாநாட்டில் ஓகி புயலில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரணத்த்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட வேண்டும். அரசு வழங்கும் வேலை வாய்ப்புகளில் காலியாக உள்ள இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், விதவைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் சீமை கருவேலங்கள் அழிக்கப்பட வேண்டும். அரசு வழங்கும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் மாற்றுததிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், மேலும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்ட பொருளாளர் கோட்டைச்சாமி, மகளிர் அணி நதியா, பஞ்சவர்ணம் உட்பட பலர் பங்கேற்றனர். சமுக ஆர்வலர் கோட்டைச்சாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!