The grant canceled haj Travel: Congressmen condemned the central government demonstration in Ramanathapuram

ராமநாதபுரத்தில் புனித ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்த பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கிய மானியத்தை ரத்து செய்து சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கின்ற பாஜ அரசை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். முதுகுளத்துார் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார்.

சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர்கள் துல்கிப், நிஜாம்அலிகான், ஹாஜா நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் பரசுராமன், வேலுச்சாமி, இலக்கிய அணி முருகேசன், மாவட்ட இளைஞர் அணி சரவணகாந்தி, ராஜசேகர், நகர் தலைவர் கோபி, சிறப்பு அழைப்பாளர் முத்துராமலிங்கம், ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர், மணிகண்டன், ஒன்றிய தலைவர்கள் ஜெயபாண்டி, சேது, செய்தி தொடர்பாளர் கவுசிமகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடியின் செயலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!