the head of the family to attach the photo in ration card, the special camp to correct the errors

பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவரின் புகைப்படம் இல்லாத நபர்களது விவரப் பட்டியல் அந்தந்த நியாயவிலை அங்காடி விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை அங்காடி விற்பனையாளர்கள் புகைப்படம் இல்லாத நபர்களிடம் புகைப்படம் சேகரம் செய்து சம்பந்தப்பட்ட குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியினை விரைவாக முடித்திடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 06.07.2017 மற்றும் 07.07.2017 ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன்படி 06.07.2017 அன்று பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குரும்பலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டத்தில் வேப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வேப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,

ஆலத்தூர் வட்டத்தில் காரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டத்தில் வி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வி.களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

மேலும் 07.07.2017 அன்று பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் வட்டவழங்கல் அலுவலகத்தில் பெரம்பலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,

குன்னம் வட்டம் திருமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் திருமாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,

ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தில் செட்டிகுளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும்,

வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தில் அரும்பாவூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாமில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்டார கூட்டுறவு சார் பதிவாளர் ஆகியோர் குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்யும் பணியினை மேற்கொள்வர்.

மேலும், இந்த முகாமில் புதியதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் போன்ற கோரிக்கை மனுக்கள் பெற்றும் தீர்வு காண உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குடும்ப அட்டையுடன் குடும்ப தலைவரது புகைப்படத்தினை இணைத்துக் கொள்ளவும், மின்னணு குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தும் பயன் பெறலாம், என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!