The hunger strike with the family near Ramanathapuram demanding a ban on shrimp farming

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியில் குடிநீர் ஆதாரத்தை நிலைகுலைய வைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ள இறால் பண்ணை மற்றும் மணல் கொள்ளையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி மற்றும் மரைக்காயர்பட்டினம் ஆகிய இரு ஊராட்சிகளில்மக்களின் வாழ்க்கை நிலை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு தென்கடல் வடகடல் பகுதியின் இடைப்பட்ட துாரத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியில், நல்ல குடிநீர் கிடைக்கிறது. இந்நிலையில் இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தென்கடற்கரை பகுதியில் மிக்க பதவியில் உள்ள மிராஸ்தார் இரால் பண்ணை அமைப்பதும், அருகில் அரசு ஊரணிகளை துார்வாருகிறது என்ற பெயரில் தனி நபர்கள் நல்ல தண்ணீர் வரும் கால்வாய்களில் மணல் கொள்ளை செய்வதால் நல்ல தண்ணீர் உப்புநீராக மாறுவதுடன் நிலத்தடி நீரும் தடைபடும் அபாயம் உள்ளது.

இறால் பண்ணை அமைப்பவர் மத்திய அரசு உதவியுடனும், ஊரணி துார் வாருகிற பெயரில் மணல் கொள்ளை அடிப்பவர்கள் மாநில அரசின் துணையுடன் செயல்படுவதால் வேதாளை பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை மட்டுமின்றி விரைவில் நிலத்தடி நீருக்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடும் அவலநிலை ஏற்பட உள்ளது.

இந்நிலையை போக்க அதிகாரிகள் அல்லது மத்திய மாநில அமைச்சர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம் ஊராட்சி பொது மக்கள் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். இதில் நல்லதீ்ரவு கிடைக்கும் என நம்புகிறோம், என்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் மக்கள் நல தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாத் மற்றும் வடக்கு தெரு ஜமாத் தலைவர் லுாத்புல்லாக், வலையர்வாடி தலைவர் பக்கிரி, தெற்கு தெரு ஜமாத் தலைவர் செய்யது அப்துர் ரஹ்மான், வேதாளை ஜமாத் தலைவர் செய்யது அபுதாகிர், குஞ்சார்வலைச தவசிமுனியாண்டி, உட்பட பலர் பங்கேற்றனர். வடக்குதெரு செய்யது இப்ராகிம் வரவேற்றார். அப்துல்நாகசர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். வேதாளை முகம்மது இப்ராகிம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். தையுப்கான் நன்றி தெரிவித்தார்.

செய்தி: இ.சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!