The IOB  Bank Rural Self Employment Training Center July 15th to come through free sewing Training

schedule
2016-07-08 | 15:20h
update
2026-06-27 | 17:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The IOB Bank Rural Self Employment Training Center July 15th to come through free sewing Training

ஐ.ஓ.பி. வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் வரும் ஜுலை 15 முதல் இலவச தையல்பயிற்சி


பயிற்சி மைய இயக்குநர் (பொ) அருள்தாசன் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மையத்தில் 2016 ஆம் வருடம் ஜுலை மாதம் 15.07.2016 ஆம் தேதி முதல் தையல் கலை பயிற்சி இலவசமாக அளிக்கபட இருக்கிறது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 40வயதிற்கு குறைவானவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

Advertisement

இந்த பயிற்சி தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் அனைத்து விதமான தையல் பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்படும் பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையாகும்.

பயிற்சி காலத்தில் மதியஉணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் முதல்மாடியில் உள்ள ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் ஆகியற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், 1 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 14.07.2016 ந்தேதி நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கு பெறவேண்டும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சிமையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர்- 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-277896 தொலைப்பேசி மூலமாக தொடர்புக்கொள்ளவும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 17:33:02
Privacy-Data & cookie usage: