“The Kunnam constituency, having emerged from a state of backwardness, is today marching along a path of development”—DMK Candidate and Minister Sivasankar campaigns.
குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில், கொளக்காநத்தம் திமுக கிளை செயலாளர் என்.ராகவன் தலைமையில், திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் இன்று காலை கொளக்காநத்தம் கிராமத்தில் வாக்குகளை சேகரித்தார். பின்னர், நொச்சிக்குளத்தில் வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
“பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும், வருங்காலத் தூண்களாக இருக்கின்ற இளைஞர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், இங்கே கூடியிருக்கின்ற அத்தனை பேருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடும் வெயிலிலும், கொளுத்தும் வெயிலிலும் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தமைக்கு முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய குன்னம் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால்… நிறுத்தப்பட்டு, கூட்டணிக் கட்சிகளான தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்லாமிய இயக்கங்கள் ஆதரவோடு போட்டியிடுகின்ற எனக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களியுங்கள் என்று கேட்டு வந்திருக்கின்றோம்.
நம்முடைய முதலமைச்சர் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க வேண்டும். அவருடைய நல்ல திட்டங்கள் நமக்குத் தொடர்ந்து கிடைத்திட வேண்டும். இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் கொடுக்காத திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ஆயிரம் கொடுத்தது. அது நம்முடைய மீண்டும் நம்முடைய ஆட்சி அமைகின்ற பட்சத்தில் 2000-ஆக உயர்த்திக் கொடுக்க இருக்கின்றார்.
நம்முடைய பிள்ளைகள் பள்ளிப் படிப்போடு நிறுத்தக் கூடாது, எல்லோருமே காலேஜ் படிக்கணும்னு சொல்லிதான் ‘புதுமைப் பெண்’ திட்டத்தைக் கொடுத்து நம்முடைய பெண் குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் கொடுத்தார். ஆண் குழந்தைகளுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் மாதம் ஆயிரம் கொடுத்தார். அந்தத் திட்டம் ஆயிரத்திலிருந்து 1500-ஆக உயர்த்தப்பட இருக்கின்றது.
அதேபோல நம்முடைய பிள்ளைகள் பள்ளியிலே படிக்கிறபோது காலை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருந்துவிடக் கூடாதுன்னுதான் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இப்போது அது ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த இருக்கின்றார்.
கிராமத்திலே இருக்கின்ற குடிசை வீடுகளை மாற்றுவதற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் – கிட்டத்தட்ட 3 லட்சம் வீடுகள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள் – குடிசை வீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு.
அதேபோல முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தார். நம்முடைய முதல்வர் இன்றைக்கு ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் – ‘இல்லத்தரசி கூப்பன் திட்டம்’. 8000 ரூபாய் பெறுமானமுள்ள அந்த கூப்பன் நம்முடைய ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படுகின்ற போது, அதை கடைகளில் கொடுத்து நமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். டிவி வேண்டுமென்றால் டிவி, இல்லை பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் – எது நம்முடைய வீட்டிற்குத் தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்தத் திட்டங்கள் எல்லாம் நமக்கு கிடைத்திட வேண்டும்.
அதேபோல நம்முடைய குன்னம் தொகுதி பின்தங்கிய நிலையிலிருந்து இன்றைக்கு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நம்முடைய கொளக்காநத்தத்திலே ஒரு அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் போய் கல்லூரி படிக்கின்ற நிலைமை போய் பக்கத்திலேயே ஒரு கல்லூரி. அதேபோல வெண்மணியிலே ஒரு அரசு ஐடிஐ. நம்முடைய பகுதி மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கொளக்காநத்திலே ஒரு துணை மின்நிலையம். வெண்மணியிலே இந்த பெரம்பலூர் மாவட்டத்திற்கான மாடல் ஸ்கூல் 50 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது.
இப்படி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதை நம்முடைய கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதற்கும் பல்வேறு நிதிகள் ஒதுக்கப்பட்டது. நம்முடைய நொச்சிக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலே சிமெண்ட் சாலை 3 லட்சத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 36 லட்சத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நொச்சிக்குளம் – அரியலூர் தார் சாலை 60 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நொச்சிக்குளம் – புஜங்கராயநல்லூர் சாலை 1 கோடியே 81 லட்சத்தில் செய்யப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையக் கட்டிடம் 14 லட்சம், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் 30 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக ஒரு கோடிக்கு மேலான பல்வேறு பணிகள் என்று கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடக்காததெல்லாம் இன்றைக்கு ஐந்து ஆண்டு காலத்தில் நடைபெற்றிருக்கிறது. நம்முடைய முதலமைச்சர் ஆட்சியில் வரும் காலங்களில் மக்காச்சோளம் தொடர்பான தொழில்கள் பெரம்பலூர் மாவட்டத்திலும், முந்திரி தொடர்பான தொழில்கள் அரியலூர் மாவட்டத்திலும் கொண்டுவரப்படும்.
இன்னும் சில கோரிக்கைகள் நம்முடைய கிராமத்திற்கு இருக்கிறது. அந்தக் கோரிக்கைகள் நம்முடைய கழக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படும். எனவே நம்முடைய மக்கள் பணி தொடர்வதற்கு, நம்முடைய முதல்வருடைய ஆட்சி தொடர்வதற்கு, அவருடைய திட்டங்கள் உங்களை வந்து சேர்வதற்கு, உங்களுடைய பிரதிநிதியாக என்னைத் தேர்ந்தெடுங்கள். உதயசூரியன் சின்னத்திலே வாக்களியுங்கள் என்று கேட்டு, நம்முடைய ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் திருச்சி மருத்துவமனையில் இருக்கிறார். இருந்தாலும் அவருடைய சார்பாக உங்களிடத்திலே வாக்கு கேட்கச் சொல்லி இருக்கிறார். எனவே மறந்து விடாதீர்கள்… உதயசூரியன், உதயசூரியன்.
இந்தச் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, நன்றி வணக்கம்.” என பேசினார். நொச்சிக்குளம் கிளை செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட திமுக முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
புஜங்கராய நல்லூர் சென்ற திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கருக்கு திமுக பிரமுகர் காட்டுராஜா மற்றும் முன்னாள் அருள்செல்வி தலைமையில், அவ்வூர் கிளையை சேர்ந்தவர்கள் அதிர்வேட்டுகள் மேளதாளங்கள் முழங்கவும், பெண்கள் பூமழை தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குசேகரிக்க வந்த கட்சியினர்களுக்கு களைப்பு ஏற்படாமல் இருக்க புரூட் மிக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர்.
முன்னதாக, கொளத்தூரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் தலைமையில், கூடலூரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வ.சுப்பரமணியன் தலைமையிலும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர். கொளக்காநத்தம், அயினாபுரம், அனைப்பாடி, கொளத்தூர், கூடலூர், இலுப்பைகுடி, பிலிமிசை, கூத்தூர், நொச்சிகுளம், புஜங்கராயநல்லூர், ஜெமீன்பேரையூர், அருணகிரிமங்கலம், திம்மூர், சில்லக்குடி, காரைப்பாடி, மேத்தால், ரசுலாபுரம், மாக்காய்குளம், ராமலிங்கபுரம், ஜெமீன்ஆத்தூர், பாலம்பாடி ஆகிய கிராமங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குகளை சேகரித்தர்.