மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் : சிறப்பு மருத்துவ முகாம்

schedule
2017-02-24 | 15:30h
update
2026-06-25 | 17:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The late former Chief Minister J. Jayalalithaa’s birthday: a special medical camp

முன்னாள் முதலமைச்சரின் 69-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் அரசுப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமசந்திரன் (குன்னம்) ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

Advertisement

இச்சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, சித்த மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பெண்களுக்கான பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவ உதவிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 17:55:16
Privacy-Data & cookie usage: