பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்டக் கல்லூரி மாணவர் பலி!

schedule
2020-07-03 | 06:18h
update
2020-07-03 | 06:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The law college student killed by an unknown vehicle hit near Perambalur!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணுவின் மகன் சரத்குமார் (வயது 27), இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறர். நேற்றிரவு இவர் பெரம்பலூரிலிருந்து மருவத்தூருக்கு பைக்கில் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் க.எறையூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரத்குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாகதேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 21:42:32
Privacy-Data & cookie usage: