பெரம்பலூர் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த டிரைவர் மோதி பலி!

schedule
2020-12-02 | 15:01h
update
2020-12-02 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The lorry that went ahead near Perambalur suddenly braked and killed the driver who came behind!

பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூரை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சுப்பிரமணியன் (வயது 36). பெரம்பலூரில் உள்ள தனியார் டிராக்டர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருவதார். நேற்றிரவு இரவு 11.00 மணியளவில் வேலையை முடித்துக்கொண்டு தனக்கு சொந்தமான டூவிலரில் பெரம்பலூரில் இருந்து புதுநடுவலூர் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் லாட்ஜ் அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி தீடிரென பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற டிரைவர் சுப்பிரமணியன் லாரியின் பின்புறத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் சுப்பிரமணியனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கன்னியாகுமரி, தோவாளை அருகே உள்ள பூதப்பாண்டி பாக்கிய நகரை சேர்ந்த லாரி டிரைவர் பாக்கியமணி (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சுப்ரமணியன் மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 20:13:40
Privacy-Data & cookie usage: