குற்ற வழக்கு இருக்கும் போது வெளிநாடு தப்பி செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது!

schedule
2021-07-04 | 01:10h
update
2026-06-11 | 01:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The man who tried to flee abroad was arrested at the airport while there was a criminal case

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சத்தியராஜ் (34) என்பவர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ள போது, வெளிநாடு செல்ல இன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, குடியுரிமை காவல் துறையினர், சத்தியராஜின் ஆவணங்களை சோதனையிட்டதில் அவர் மீது குற்ற வழக்கு இருப்பது தெரிய வந்ததால், அவரை வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்காமல், பெரம்பலூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்கள் யாரேனும் வெளிநாடு செல்ல முயற்சித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்.பி ச.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 01:23:38
Privacy-Data & cookie usage: