பெரம்பலூரில் தொடர் திருட்டுக்களை தடுக்க காவலர் குழுக்கள் அமைக்க வணிகர்கள் கோரிக்கை

schedule
2018-01-11 | 12:31h
update
2018-01-11 | 12:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Merchant Welfare Association requested the establishment of guards to prevent continuous robberies in Perambalur

பெரம்பலூரில் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச் சங்கத்தின் தலைவர் சத்யா நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

Advertisement

பெரம்பலூர் நகரில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் பாரத ஸ்டேட வங்கி அருகில் போக்குவரத்து சிக்னலை திறந்துவைத்து, தடுப்புகள் அமைத்து போக்குவரத்து காவலர்களை நிறுத்தியும் போக்குவரத்தை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் சார்பிலும் ஊடகங்கள் சார்பிலும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திஷா மித்தல் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக மாவட்ட வணிகர் நல சங்கம் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல, சங்குப்பேட்டை பகுதியிலும் போக்குவரத்து காவலர்களை நிறுத்தி சிக்னல் முறையாக இயங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரம்பலூரில் கடைகளில் தொடர் திருட்டுகள் நடந்துவருவதை தடுக்க தனி காவலர் குழுக்களை அமைக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 08:05:56
Privacy-Data & cookie usage: