the Missing Farmer found dead in a well near by PERAMBALUR

schedule
2016-07-04 | 19:40h
update
2026-06-27 | 17:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

the Missing Farmer found dead in a well near by PERAMBALUR

வி.களத்தூர் அருகே வயலுக்கு சென்ற போது மாயமான விவசாயி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்னான் மகன் ராமநாதன்(65), விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

Advertisement

இதனையடுத்து அவரது குடும்பத்தார் ராமநாதனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைத்திடாததால், ஒருவேளை கிணற்றில் தவறி விழுந்து ராமநாதன் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரை ஊர்பொது மக்கள் மற்றும் பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தேடி வந்தனர்.

நீண்ட நேர தேடுதல் பணிக்கு பின்னர் ராமநாதன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமநாதனின் மகன் முருகேசன்(40) அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 17:30:22
Privacy-Data & cookie usage: