பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம், புதுநடுவலூரில் அம்மா மினி கிளினிக்குகளை எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைத்தனர்.

schedule
2021-02-14 | 07:11h
update
2021-02-14 | 07:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The MLAs opened Amma Mini Clinics at Kavulpalayam, Puthunaduvalur near Perambalur.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுள்பாளையம், புதுநடுவலூர் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட மினி கிளினிக்குளை எம்.எல்.ஏக்கள் ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்), ஆர்.தமிழ்ச்செல்வன் ( பெரம்பலூர்) ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக அம்மாபாளையம் வட்டார மருத்துவர் சூரியகுமார் வரவேற்றார். ஊராட்சித் தலைவர்கள் கலைச்செல்வன் (கவுள்பாளையம்), ஜெயந்திநீல்ராஜ் (புதுநடுவலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏக்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து மீண்டும், அதிமுக அரசுக்கு மீண்டும் ஆதரவளிக்க கேட்டு கொண்ட தோடு இரு கிராமங்களுக்கும் சுமார் ஒரு கோடி மதிப்பிலான சாலைப்பணி திட்டங்களை அறிவித்தனர். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆர்.கீதாராணி, மாவட்ட மலேரியா மருத்துவ அலுவலர் சுப்பிரமணியன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மற்றும் கவுள்பாளையம், புதுநடுவலூர் ஊராட்சி உறுப்பினர்கள், அதிமுக கட்சி கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 12:00:35
Privacy-Data & cookie usage: