சென்னையில் குழந்தைகளுக்கு விஷம் கலந்த பாலை கொடுத்து கொன்ற பெண் நாகர்கோவிலில் கைது!

schedule
2018-09-02 | 10:17h
update
2018-12-22 | 09:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Mother who killed the poisoned child in Chennai was arrested in Nagercoil!

சென்னை அருகே குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, தப்பியோடிய தாயை நாகர்கோவிலில் தனிப்படையினர் கைது செய்தனர்.

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் வசித்து வருவபர் விஜய், தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் பிரிவில் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி அபிராமி , அஜய் என்ற மகன் (வயது 7) , கார்னிகா ( வயது 4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வெள்ளிக்கிழமை கூடுதல் பணி காரணமாக வங்கியிலேயே விஜய் தங்கிவிட்டார். அடுத்த நாள் காலை சனிக்கிழமை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி குழந்தைகள் இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தனர்.

Advertisement

புகாரின் பேரில், குழந்தைகளின் உடலை மீட்ட குன்றத்தூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தாய் அபிராமி தப்பித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அபிராமியின் செல்போன் சிக்னல் நாகர்கோவிலில் கிடைத்தது. தனிப்படையினர் அங்கு விரைந்தனர். மேலும், அவருடைய கள்ளக்காதலன் சுந்தரம் என்பவர் அளித்த தகவலின் பேரில் அபிராமியை போலீசார் கைது செய்தனர்.

Tags: Chennai, kanyakumari, Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 21:22:34
Privacy-Data & cookie usage: