விஷம் கொடுத்து இரு குழந்தைகளை கொலை செய்த, தாயும் தற்கொலை? பெரம்பலூர் அருகே பெரும் சோகம்!

schedule
2023-01-28 | 15:24h
update
2024-07-07 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The mother who killed two children committed suicide? : tragedy near Perambalur!

பெரம்பலூர் அருகே தனது இரட்டை பெண் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெண்ணகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே உள்ள பெண்ணகோணம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஜெயா(27) அவரது இரட்டையரராக பிறந்த பெண் குழந்தைகளான நிகிதா, நிகிசா ஆகியோருடன் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள அவரது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் பெண்ணகோணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் ஜெயா தங்கியிருந்த அறை கதவு நீண்ட நேரமாக பூட்டி கிடப்பதை கண்டு சந்தேகமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடப்பதும் ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான தகவல் மங்களமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சசனை காரணமாக 2 குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, பிறகு ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்காலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையான காரணங்கள் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இரட்டை பெண் குழந்தைகளும், தாயும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 19:25:35
Privacy-Data & cookie usage: