நாமக்கல்லில் எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

schedule
2019-01-04 | 16:57h
update
2019-01-04 | 16:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The MRB Nurses Development Association demonstrated in Namakkal

நாமக்கல்லில் எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோர்ட் உத்தரவின்படி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அனைத்து பெண் செவிலியர்களுக்கும் ஏற்புடைய சீருடையான சுடிதார் வழங்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

இடமாறுதல் கலந்தாய்வில் பங்கு பெற்று 8 மாதங்களாகியும் பணியில் இருந்து விடுவிக்ப்படாத செவிலியர்களை இழுத்தடிப்பு செய்யாமல் விடுவிக்கவேண்டும். எம்ஆர்பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அரசு ஊழியர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாதேஸ், பொது சுகாதாரததுறை அலுவலக சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்ஆர்பி செவிலியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 12:06:17
Privacy-Data & cookie usage: