முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து சாலைமறியல்

schedule
2018-09-07 | 06:45h
update
2018-09-07 | 06:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The municipality which has not properly distributed drinking water in the Perambalur sector is condemned by roadblocked

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் குடிநீர் கேட்டு 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் 10வது வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 நாட்களுக்கு ஒரு முறை ஏரி தண்ணீரும், 15 நாட்களுக்கு ஒரு முறை காவேரி குடிநீரும் ஒரு மணி நேரம் தட்டுப்பாடாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இவ்வாறு வழங்கப்படும் தண்ணீர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் பயன்படுத்த போதுமானதாக இல்லை என நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி 100க்கும் மேற்பட்பட பொது மக்கள் பெரம்பலூரிலிருந்து துறைமங்கலம் வழியாக திருச்சி செல்லும் இணைப்பு சாலையான 3 ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளாகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

பொது மக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூரிலிருந்து துறைமங்கலம் வழியாக திருச்சி செல்லும் இணைப்பு சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 00:53:09
Privacy-Data & cookie usage: