The murder of a mechanic beer bottle near Perambalur: police enquiry

schedule
2017-04-28 | 17:31h
update
2026-06-27 | 00:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The murder of a mechanic beer bottle near Perambalur: police enquiry | பெரம்பலூர் அருகே மெக்கானிக் பீர்பாட்டிலில் குத்திக் கொலை : போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே உள்ள வயல்வெளிப் பகுதியில் மெக்கானிக் ஒருவர் பீர்பாட்டிலில் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 39). டூவீலர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை, சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் – கல்பாடி சாலையில் நடராஜன் என்பவரது வயலில் கழுத்தறுக்கபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார் .

Advertisement

இதனை அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருவத்ததூர் போலீசார் , கொலை செய்யபட்டு கிடந்த ராஜாவின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை தொடர்ந்தனர்.

முதற் கட்ட விசாரணையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரம்பலூர் விஜயகோபாலபுரத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாவும், கொலை முயற்சி, குண்டாஸ் போன்ற வழக்குகள் மெக்கானிக் ராஜா இருப்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மொக்கானிக் ராஜா நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு, பழிக்குபழி நோக்கத்தில் பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கலாம், அல்லது நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யபட்டிருக்கலாம் என்ற கோணங்களில் முதற் கட்ட விசாரணையை துவக்கி உள்ள போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் நெருங்கி உள்ளளதாகவும் கூறப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 00:53:40
Privacy-Data & cookie usage: