பெரம்பலூர் அருகே இளம் பெண் மர்ம சாவு வழக்கு கொலை வழக்காக மாற்றம்

schedule
2017-03-18 | 12:20h
update
2026-09-21 | 18:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Mysterious Case change of murder for the death of the young girl near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் விவசாயி ஒருவரின் வயலில் இளம் பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் சட்டப்பிரிவு 174 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இளம் பெண் ஐஸ்வர்யா (வயது 22) நாவலூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் பார்த்தீபன் (வயது 25) தனியார் வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்துள்ளார், அப்போது ஐஸ்வர்யா துணிக்கடையில் வேலை பார்த்துவிட்டு இருவரும் ஒரே பேருந்தில் வீடு திரும்பி சென்றுள்ளனர்.

அப்போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. மேலும், விசாரணையில் இறந்து போன ஐஸ்வர்யா கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காதலர்களான பார்த்தீபன் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு தரப்பிலும் பேச்சு வார்த்ததை நடத்தி சுமூகமான முறையில் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பார்த்தீபன் வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்கும், ஐஸ்வர்யா பஞ்சாலைக்கும் வேலைக்கு பெற்றோர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோயம்முத்தூரில் ஐஸ்வர்யா வேலை செய்த ஆலை நிறுவனத்தில் வீட்டிற்கு அனுப்பாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால், பயந்த ஆலை நிர்வாகம், பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர். பின்னர், கடந்த 11ம்தேதி குரும்பலூர் வந்த ஐஸ்வர்யா அடுத்த நாள் 12ம் தேதி காலை பார்த்தீபனை சந்திப்பதற்காக நாவலூர் சென்றவர் அங்கு காதலன் பார்த்தீபனின் பெற்றோரிடம் பார்த்தீபனை பற்றி விசாரித்துள்ளார்.

உண்மையை தெரிவித்தால், விபரீதமாக ஏதோ செய்து கொண்டால் என்ன செய்வது என நினைத்தவர்கள் பார்த்தீபன் குறித்து கூறவில்லை. ஐஸ்வர்யா நண்பகல் வரை அங்கேயே இருந்துள்ளார். பின்னர், ஐஸ்வர்யா பார்த்தீபனுக்கு நல்ல பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், முதல்நாளே 11ம் தேதியே வேப்பந்தட்டை விமான டிக்கட் புக்கிங் செய்துவிட்டு பெரிய வடகரையில் அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றும். 12ம் தேதி ஞாயிற்று கிழமை காலையிலேயே வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவை தேடி நாவலூர் சென்ற அவரது உறவினர்கள் பார்த்தீபனின் உறவினர்களிடம் ஐஸ்வர்யா குறித்து கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது தான் வெளிநாட்டிற்கு பார்த்தீபன் சென்ற உண்மையை கூறிய அவர்கள் டிக்கட் நகலை காண்பித்து தெரிவித்துள்ளனர்.

அதனால் காணமல் போன ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி குரும்பலூர் அருகே விவசாயி ஒருவரின் கிணற்றில் சடலமாக கிடைத்துள்ளார்.

பார்த்தீபன் மற்றும் அவரது நண்பர் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் மகன் சரண்ராஜ் ஆகியோர் ஐஸ்வர்யா இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

இவ்வழக்கை 306 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேலும், இது குறித்து மேலும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலனை தேடி வந்த பெண் மரணமடைந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.09.2026 - 18:35:56
Privacy-Data & cookie usage: