போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தலைவர் ஜெயந்திநீலராஜ் பதவிஏற்ற முதல்நாளே நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.

schedule
2020-01-07 | 05:21h
update
2020-01-07 | 05:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The non-competitive leader Jayanti Neelaraj was given the welfare benefits on the first day he took office incharge near in Perambalur

பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் நிறுவனத் தலைவரின் மகளும், செயலாளர் நீல்ராஜூவின் மனைவியுமான ஜெயந்தி , பெரம்பலூர் ஒன்றியம், புதுநடுவலூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நேற்று புதுநடுவலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த பதவி விழாவில் அவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றார்.

புதிய தலைவர் மற்றும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 9 பேருக்கும், தேர்தல் உதவி அலுவலர் ஜாஸ்பர் உள்ளாட்சி நடைமுறைகளின்படி பதவியில் அமர்த்திவைத்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் நிறுவனத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

இதில் ஊராட்சிமன்றத் தலைவர், தமது சொந்தசெலவில் 6 பெண்களுக்கு தையல்எந்திரம், ஒரு மாற்றுத் திறனாளிக்கு மூன்றுசக்கர ஸ்கூட்டர், ஒருதொழிலாளிக்கு சலவை எந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் துணைத் தலைவர் அனந்தலட்சுமிகதிரவன், பாரத் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திக், வழக்கறிஞர் பாபு, மலேசியா ரொசாரியா ஓட்டல் குழுமத்தின் தலைவர் பாலா, சென்னை பி.எம்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தம்பதியினர் தியாகராஜன்-வசுந்தரா, வினோத்-சரண்யா, மற்றும் பெரம்பலூர் வர்த்தக பிரமுகர்கள் செந்தூர் மெடிக்கல் சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு, புதிய ஊராட்சி மன்ற புதிய தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் இயக்குனர் மணி, உயர்அலுவலர் ராஜசேகர், தலைமை நிர்வாக அலுவலர் நந்தகுமார் மற்றும் கிராம பிரமுகர்களுடன் இணைந்து தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

படவிளக்கம்: பெரம்பபலூர் அருகே புதுநடுவலூர் ஊராட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஜெயந்திநீல்ராஜ், தனலட்சுமிசீனீவாசன் குழுமங்களின் நிறுவன தலைவர் சீனிவாசன் முன்னனிலையில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிக்கு மூன்றுசக்கர ஸ்கூட்டர், சலவை எந்திரம் ஆகியவற்றை வழங்கிய போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 13:58:29
Privacy-Data & cookie usage: