குன்னம் எம்.எல்.ஏ அலுவலகத்தை, ஆலத்தூர் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.

schedule
2021-05-28 | 14:28h
update
2021-05-28 | 14:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The office of Kunnam MLA was opened by Alathur Chairman N. Krishnamurthy.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் எம்.எல்.ஏ-வும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கரின் தொகுதி அலுவலகத்தை, திமுக கட்சியின் மூத்த முன்னோடியும், பெரியர் விருது பெற்றவரும், ஆலத்தூர் ஒன்றிய சேர்மனுமான (கொளக்காநத்தம் ) என்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சாதனைகளுக்கும், பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி, செயல்படுத்தி வருகிறார். அதோடு பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், தேர்தல் காலங்களின்போது பொது மக்களிடையே தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் உடனடியாக நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண்பதற்காக உங்கள் தொகுதியின் முதலமைச்சர் மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, அதன் சிறப்பு அலுவலரை நியமித்து, 100 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. அதேபோல பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், என்னிடம் நேரடியாக மனு அளித்திடவும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையிலும், குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் மூலம் பெறப்படும் மனுக்களை உரிய ஏடுகளில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுகுறித்த தகவல் மற்றும் விவரங்கள் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கூடிய தனிமனித இடைவெளியை கடைபிடித்து, விழிப்புணர்வுடன் இருந்து, கொரோனா தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், வேப்பூர் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, ஊட்டி காபிபார் செல்லப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ராஜேந்திரன், நல்லத்தம்பி, அண்ணாதுரை, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.06.2026 - 04:16:39
Privacy-Data & cookie usage: