பெரம்பலூரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு

schedule
2017-02-24 | 07:03h
update
2026-09-16 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The opening of the former Chief Minister Jayalalithaa’s statue in Perambalur

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பெரம்பலூரில் சிலை திறப்பு நடைபெற்றது

பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் கட்சித் தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளருமானன ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட்டது. அதற்கு மாவட்ட செயலாளம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. இராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும், வழங்கப்பட்டது.

Advertisement

ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நலத்திட்டங்களும் மருத்துவ முகாம்களும் நடந்து வருகின்றனர். இதில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிச்செல்வன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலளார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது போன்று பழைய பேருந்து நிலையத்தில் தீபா பேரவையினர் மாலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 15:13:02
Privacy-Data & cookie usage: