பெரம்பலூர் அருகே மயானத்திற்கு பாதை வசதியில்லை : இடுப்பளவு தண்ணீரில் சவத்தை எடுத்துச் சென்றனர்

schedule
2017-12-01 | 14:30h
update
2017-12-01 | 14:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The path to the graveyard is not near the Perambalur: they took the cavity in the water

பெரம்பலூர் மாவட்டத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை இடுப்பளவு ஆற்று தண்ணீரில் எடுத்துக் கொண்டு சென்ற பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓகி புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூரில் இன்று பெரியசாமி (வயது68) என்பவர் உடல்நல குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடுகாடு வெள்ளாற்றின் மறு கரையோரத்தில் உள்ளது.

இந்நிலையில், பெரியசாமியின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றபோது வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது. வேறு வழியில்லாததால் ஆற்றுத் தண்ணீரில் பெரியசாமியின் உடலை அவரது உறவினர்கள் தூக்கிக் கொண்டு ஆற்றைக்கடந்துச் சென்று பிணத்தை மயானத்தில் அடக்கம் செய்தனர்.

எனவே, இது போன்ற நிலை வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 10:24:05
Privacy-Data & cookie usage: