கழிவை அப்புறப்படுத்தாத மருத்துவமனைக்கு அபராதம் : பெரம்பலூர் ஆட்சியர்

schedule
2017-10-25 | 16:03h
update
2017-10-25 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The penalty for the hospital was not properly discharged: Perambalur Collector’s order.

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பதன் தொடர் நடவடிக்கையின் ஒருபகுதியாக இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் திருமண மண்டபங்களில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று ஆய்வு செய்தார்.

Advertisement

டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ள இடங்களாக கண்டறியப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.25,000-மும், இரண்டு திருமண மண்டபங்களுக்கு ரூ.30,000- என மொத்தம் ரூ.55,000- அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேவையான விழிப்புணா;வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (25.10.17) புதுவயலூர் கிராமத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த டயர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இவ்வாய்வின் போது திட்ட இயக்குநர் ( மாவட்ட வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 02:36:45
Privacy-Data & cookie usage: