பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் அ நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

schedule
2020-02-25 | 06:17h
update
2020-02-25 | 06:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Perambalur District DMK Executive Committee meeting

?

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமையில், தலைமை கழக பிரதிநிதி எம்.ராஜகாந்தம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், ந.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், பாடாலூர் சோமு .மதியழகன், சி. இராஜேந்திரன், நகர செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன். சம்பத், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ப.செந்தில் நாதன் மற்றும் பேரூர், கிளை செயலாளர்கள், உள்ளிடட பல்வேறு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

கூட்டத்தில், மார்ச் 01 தலைவர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது,
கழகத்தின் 15 வது உட்கிளை- ஊர்க்கிளை தேர்தலை ஒற்றுமையாகவும்,ஒருமனதாகவும், ஒருங்கினைந்து சிறப்பாக நடத்துவது, மத்திய பா.ஜ.க பாசிச அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதாவை திரும்ப பெறவேண்டும், என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

படவிளக்கம்: பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்க்குழு கூட்டத்தில், தலைமை கழக பிரதிநிதி எம்.ராஜகாந்தம் பேசிய போது எடுத்தப்படம்.பெரம்பலூர் மாவட்ட திமுக பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 02:18:56
Privacy-Data & cookie usage: