தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவி : பெரம்பலூர் எம்.எல்.ஏ வழங்கினார்

schedule
2018-02-02 | 09:00h
update
2018-02-02 | 09:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Perambalur MLA has provided relief assistance to the families of fire victims

பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட எளம்பலூர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் நெய்குப்பை கிராமங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மனைவி லட்சுமி, நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் சுரேஷ், ஆகியோர்களது வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து முற்றிலும் நாசமாயின.

Advertisement

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்செல்வன், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அரசு வழங்கும் நிவாரண உதவிகளாக இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000- தொகை, வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருட்களை நேற்று வழங்கினர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன், அவரது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.5,000- தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் பாரதிவளவன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 07:32:14
Privacy-Data & cookie usage: