பெரம்பலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தவர் தப்பி சென்றவர் சாவு!

schedule
2023-08-12 | 08:39h
update
2023-08-12 | 08:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The person who was being treated at the Perambalur Government Hospital who escaped has died!

பெரம்பலூர் சொக்கநாதபுரம் பிரிவு சாலையில், சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, அவரை ஆம்புலன்ஸ் மூலம், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்துவிட்டார்.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்ததும், உடன் பராமாரிக்கவும், உணவு வழங்கவும், ஆள் இல்லாததால் இறந்தது தெரிய வந்தது.

இறந்தவர் நேற்று முன்தினம் லப்பைகுடிக்காட்டில் இருந்ததாகவும், அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் சிகிச்சையில் இருந்தவர் நேற்று அதிகாலை 4 மணிக்கு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அரசு மருத்துவமனையை விட்டு வெளியே தப்பி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 23:32:44
Privacy-Data & cookie usage: