The playground at Perambalur, the Makkal Medai for demanding extension of the use of children’s park
பெரம்பலூர் நகர பொது மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பயன் படுத்தி வந்த ஒரே பொழுது போக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள விளையாட்டரங்கம் மற்றும் சிறுவர் பூங்கா சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இரவு 9மணி வரை செயல்பட்டு வந்தது, இதனை பொது மக்களும் குழந்தைகளும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை 7மணி வரைதான் செயல்படும் என்று பராமரிப்பு பணியில் உள்ள ஊழியர்கள் 7மணிக்கே வாயிற்கதவை விடுகின்றனர். தற்போது கோடை விடுமுறை உள்ளதால் விளையாட வரும் குழந்தைகளும் உடற்பயிற்சி செய்ய வரும் பொதுமக்களும் 7மணிக்கே திருப்பி அனுப்பி விடுவதால் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.
இதனையறிந்த மக்கள்மேடை அமைப்பினர் அதன் ஒருங்கினைப்பாளர் டாக்டர் சி.கருணாகரன் தலைமையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், விசிக இரா.ஸ்டாலின், திராவிடர் கழகம் தங்கராசு, ஆசிரியர் நடராஜன், பெரியார் திராவிட கழகம் தாமோதிரன், தமுஎச செல்வகுமார், தமுமுக குதரத்துல்லா, எஸ்டிபிஐ சித்திக், விவசாய தொழிலாளர் சங்கம் பி.ரமேஷ், மாதர் சங்கம் எ.கல்யாணி, சிபிஎம் வட்டசெயலாளர் எஸ்பிடி.ராஜாங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர். அம்மனுவில் உடற்பயிற்சியும் நடைபயிற்சியும் விளையாட்டும் பொழுதுபோக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றையகால சூழ்நிலையில் இன்றியமையாதது. சர்க்கரை நோயும் இரத்தகொதிப்பும் மாரடைப்பும் அச்சுறுத்தலாக உள்ள இன்றைய சுழலில் மேற்படி பயிற்சி முறைகளால் நோய்களில் இருந்து மக்கள் பாதுகாக்க விளையாட்டு மைதானத்தையும் சிறுவர் பூங்காவையும் இரவு 9மணிவரை பயன்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரம்பலூர் மக்கள்மேடை அமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.