வேப்பந்தட்டையில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்!

schedule
2019-06-04 | 16:36h
update
2019-06-04 | 16:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The plea for petition asking for a 100-day work in the Veepanthattai

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் மற்றும் தொண்டமாந்துறை ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முறையாக வேலைகள் வழங்கப்படவில்லை கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் விரைவில் பணி ஆணை பெற்று வேலைகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்தது போன்று வேலைகள் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். அப்போது மிக விரைவில் பணி ஆணை பெற்று வேலையில் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 05:23:39
Privacy-Data & cookie usage: