PMEGP கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

schedule
2017-06-11 | 08:05h
update
2026-04-25 | 17:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The PMEGP is invited to apply for employment under self employment

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), 01.07.2016 முதல் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்பும் பயனாளிகள் www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்கவேண்டும்.

Advertisement

இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், வங்கி மூலம் கடன் பெறலாம்.

இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூபாய் 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தோ;ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்திட்டம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் மாவட்ட தொழில் மையம் வாயிலாகவும், கிராம பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் வாயிலாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2017-2018 நிதியாண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்திற்கு இலக்காக 26 திட்டங்களுக்கு ரூ.44.60 லட்சம் மானிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 17:20:14
Privacy-Data & cookie usage: